Home 13வது பொதுத் தேர்தல் பத்துகவான் நாடாளுமன்றத்தில் ஜசெக வேட்பாளராக கஸ்தூரி பட்டு போட்டி

பத்துகவான் நாடாளுமன்றத்தில் ஜசெக வேட்பாளராக கஸ்தூரி பட்டு போட்டி

504
0
SHARE
Ad

Kasturi-Pattoo-Sliderகோலாலம்பூர் ஏப்ரல் 19- பினாங்கு மாநிலத்தில் பத்துகவான் நாடாளுமன்றத் தொகுதியில் ஜ.செ.க.சார்பில் பட்டுவின் மகள் கஸ்தூரி ராணி போட்டியிடவுள்ளார் என ஜசெக இன்று அறிவித்துள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் பத்துகவான் நாடாளுமன்றத் தொகுதியிலும், பிறை சட்டமன்றத் தொகுதியிலும்  போட்டியிட்டப் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி வெற்றிபெற்றார்.

ஆனால் இம்முறை பிறை சட்டமன்ற தொகுதியில் மட்டும் டாக்டர் ராமசாமி போட்டியிடுவதால், அவருக்குப் பதிலாக பத்துகவான் நாடாளுமன்ற தொகுதியில் கஸ்தூரி பட்டு போட்டியிடவுள்ளார்.

#TamilSchoolmychoice

இதற்கு முன்னர், கஸ்தூரி சிலாங்கூர் மாநிலம், புக்கிட் காசிங் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அங்கு புதிய வேட்பாளர் ராஜீவ் போட்டியிடுகிறார்.

மேலும், பத்துகவான் நாடாமன்ற தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் கெராக்கான் கட்சியைச் சார்ந்த என்.கோபாலகிருஷ்ணன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1970ஆம் 80ஆம் ஆண்டுகளில், ஜசெகவின் முன்னணி இந்தியத் தலைவர்களுள் ஒருவராக விளங்கியவர் பி.பட்டு. சீன மொழி உட்பட பன்மொழிகளில் திறன் வாய்ந்தவர். மேடைப் பேச்சிலும் வல்லவராக விளங்கியவர்.

ஜசெகாவின் மூத்த அரசியல்வாதியாக விளங்கிய அமரர் பி.பட்டுவின் மூத்த புதல்வி தான் கஸ்தூரி.இவர் தனது தந்தையைப் போல் சிறுவயது முதல் ஜசெகாவில் மிகுந்த  ஈடுபாடும், தமிழ், மலாய், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவராகவும் விளங்கிவருகிறார்.

அதோடு,வரும் 13வது பொதுத் தேர்தல் மூலம்,கஸ்தூரி முதன் முறையாக அரசியல் அரங்கில் காலடி எடுத்து வைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.