Home நாடு காவல் துறை துணைத் தலைவரின் கூற்று பொறுப்பற்றது- நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாடல்!

காவல் துறை துணைத் தலைவரின் கூற்று பொறுப்பற்றது- நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாடல்!

673
0
SHARE
Ad
பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு

கோலாலம்பூர்: பதின்ம வயது மாணிவிக்கு எதிரான பாலியல் அச்சுறுத்தல் ‘ஒருவேளை நகைச்சுவையாக இருக்கலாம்’ என்று காவல் துறை துணைத் தலைவர் அக்ரில் சானி அப்துல்லா சனி கூறியதற்கு பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.

“வீட்டு வன்முறை உள்ளிட்ட பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறையில் புகார்களை முன்வைக்க தயங்குவதற்கான காரணம் இதுதான்.

“சக வகுப்பு தோழரால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக அச்சுறுத்தப்பட்ட ஒரு மாணவியின் புகார் தொடர்பாக துணை காவல் துறைத் தலைவர் அளித்த கருத்தை நான் அதிர்ச்சியுடனும் அவநம்பிக்கையுடனும் படித்தேன். துணை ஐ.ஜி.பி ஒருவரை சேதப்படுத்துவது அல்லது பாலியல் பலாத்காரம் செய்வது போன்ற ஒரு வன்முறையை வன்முறையாக தீவிரமாக கருதுகிறாரா?,” என்று கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.

#TamilSchoolmychoice

17 வயதான மாணவி ஐன் ஹுஸ்னிசா சைபுல் நிஜாம் பாலியல் கருத்துகள் குறித்து நகைச்சுவை செய்ததாக ஆசிரியர் மீது புகார் அளித்ததற்கு அச்சுறுத்தலைப் பெற்றார்.

“மாணவி இரண்டு புகார்களை அளித்துள்ளார். முதலாவது, தனது ஆசிரியரின் முறையற்ற அணுகுமுறை. இரண்டாவது, தனது வகுப்பு மாணவரிடமிருந்து ஒரு நகைச்சுவையாக இருக்கலாம், ஆனால், அதனை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, ” என்று அக்ரில் சானி கூறியிருந்தார்.

விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும், வாக்குமூலங்கள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

குவாந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் புசியா சல்லேவும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். இது போன்ற ஒரு உயர் காவல் துறை அதிகாரியிடமிருந்து வரும் மிகவும் பொறுப்பற்ற அறிக்கை இது என்று அவத் கூறினார்.

“நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன், அவரது சொந்த மகள் என்றால் அவருடைய பதிலும் அப்படியே இருக்குமா?” என்று அவள் கேட்டுள்ளார்.