Home நாடு நோன்பு பெருநாள் விடுமுறைக்குப் பிறகு வீட்டு அடிப்படையிலான கற்றல், கற்பித்தல் முறை நடைமுறை

நோன்பு பெருநாள் விடுமுறைக்குப் பிறகு வீட்டு அடிப்படையிலான கற்றல், கற்பித்தல் முறை நடைமுறை

436
0
SHARE
Ad

புத்ராஜெயா: நாடு முழுவதும் உள்ள அனைத்து தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளும் அடுத்த மாதம் நோன்பு பெருநாள் கொண்டாட்ட பள்ளி விடுமுறைக்குப் பிறகு கல்வி அமர்வு மீண்டும் தொடங்கும் போது வீட்டு அடிப்படையிலான கற்பித்தல் மற்றும் கற்றல் முறைக்கு திரும்ப கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு 7,780 தொடக்கப் பள்ளிகளில் சுமார் 2.7 மில்லியன் மாணவர்களையும், நாடு முழுவதும் உள்ள இடைநிலைப் பள்ளிகளில் 2.03 மில்லியன் மாணவர்களையும் உட்படுத்தும்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளும் மொத்தம் 10 நாட்களுக்கு இந்த நடைமுறையை செயல்படுத்தும்.

#TamilSchoolmychoice

கொவிட் -19 பாதிப்புகள் பள்ளிகளைப் பாதிக்காமல் தடுக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும் என்று கல்வி அமைச்சர் டாக்டர் ராட்ஸி ஜிடின் தெரிவித்தார். இது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை தொற்று பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது.

“நோன்பு பெருநாள் போது என்ன நிலைமை இருக்கும் என்று எங்களுக்குத் தெரியாததால், இப்போது சமூகத்திற்குள் கொவிட் -19 இன் பரவலான சம்பவங்களை கவனத்தில் கொண்டு இதுபோன்ற முடிவு வகுக்கப்பட்டது.

“ஏதாவது செய்யப்படாவிட்டால், நோன்பு பெருநாள் பள்ளி விடுமுறைக்குப் பிறகு பள்ளி அமர்வு மீண்டும் தொடங்கும் போது, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் தொற்று பரவக்கூடும் என்று நாங்கள் அஞ்சுகிறோம்,” என்று அவர் ஓர் ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூறினார்.