Home நாடு குரல்பதிவு தொடர்பாக அன்வார் விசாரிக்கப்படுகிறார்!

குரல்பதிவு தொடர்பாக அன்வார் விசாரிக்கப்படுகிறார்!

452
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடியுடனான உரையாடல் என்று கூறப்படும் குரல்பதிவு குறித்து பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று காவல் துறையில் வாக்குமூலம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவரது வழக்கறிஞர் சங்கரா நாயக் இந்த விஷயத்தை உறுதிப்படுத்தினார். அன்வார் புக்கிட் அமானில் வாக்குமூலம் அளிப்பார்.

“அன்வாருக்கு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், அவர் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505 (பி) மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறார். விசாரணை குரல்பதிவு பற்றியது என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505 (ஆ) பொது தேசத் துரோகத்திற்கு வழிவகுக்கும் அறிக்கைகளைக் கையாள்கிறது.