Home நாடு இந்தியா செல்லவும், அங்கிருந்து நாடு திரும்பும் விமானங்களுக்கும் தற்காலிக தடை

இந்தியா செல்லவும், அங்கிருந்து நாடு திரும்பும் விமானங்களுக்கும் தற்காலிக தடை

600
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இந்தியாவில் அதிகரிக்கும் கொவிட்-19 தொற்று நோய் காரணமாக, நாட்டில் அது பரவுவதைத் தடுக்க ஏப்ரல் 28 முதல் இந்தியாவுக்குச் செல்லவும், அங்கிருந்து நாடு திரும்பும் விமானங்களுக்கு தற்காலிக தடை விதிக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டது.

தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறுகையில், இந்தியாவின் எந்த இடத்திலிருந்தும் நேரடி விமானம் மூலம் பயணத்தை மேற்கொண்ட பயணிகள் நாட்டிற்குள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

“இந்த தடை மலேசியாவில் இருந்து வேறொரு நாட்டிற்கு செல்லும் பயணிகளுக்கும் பொருந்தும். இருப்பினும், மலேசிய குடிமக்களுக்கு விலக்கு அளிக்கப்படும்,” என்று இஸ்மாயில் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மலேசியாவில் தற்காலிக வேலைவாய்ப்பு வருகைக்கான அனுமதி வைத்திருக்கும் இந்திய குடிமக்களுக்கும், மாணவர்கள் மற்றும் வணிக பயணிகளுக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.