Home நாடு நிக்கி லியோவின் டத்தோஸ்ரீ பட்டம் பறிக்கப்பட்டது

நிக்கி லியோவின் டத்தோஸ்ரீ பட்டம் பறிக்கப்பட்டது

558
0
SHARE
Ad

குவாந்தான்: பகாங் அரண்மனை தப்பி ஓடிய தொழிலதிபர் லியோ சூன் ஹீயின் டத்தோஸ்ரீ பட்டத்தை உடனடியாக இரத்து செய்வதாக நேற்று அறிவித்தது.

மாநிலச் செயலாளர் சல்லேஹுடின் இஷாக் கூறுகையில், அவரது சகோதரர் லியோ வீ லூனின் பட்டமும் இரத்து செய்யப்படுவதாகக் கூறினார்.

“பகாங் சுல்தான் வழங்கிய உத்தரவின் பேரில் விருதுகள் இரத்து செய்யப்பட்டது மற்றும் முன்னர் வழங்கப்பட்ட எந்தவொரு தலைப்பையும் பயன்படுத்த சம்பந்தப்பட்டவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

#TamilSchoolmychoice

“பரிந்துரைக்கப்பட்டவர்கள் பகாங் சின்னங்கள், தலைப்புகள் அல்லது விருதுகளை மாநில செயலாளர் அலுவலகத்திற்கு திருப்பித் தர வேண்டும்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

விருது இரத்து செய்வதற்கான கடிதம் கடந்த புதன்கிழமை பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்டதாக சல்லேஹுடின் தெரிவித்தார்.

ஏப்ரல் 9-ஆம் தேதி, நிக்கி மற்றும் அவரது சகோதரர் சிலாங்கூரில் உள்ள பெட்டாலிங் ஜெயா அமர்வு நீதிமன்றத்தில் நிதி மோசடி குற்றக் குழுவில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டனர்.

நிக்கியைக் கண்டுபிடித்து கைது செய்ய இன்டர்போல் சிவப்பு அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது.