Home நாடு மொகிதின் யாசின், ஹம்சா சைனுடின் குரல்பதிவு இன்னும் தீவிரமானது அல்லவா?

மொகிதின் யாசின், ஹம்சா சைனுடின் குரல்பதிவு இன்னும் தீவிரமானது அல்லவா?

559
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் குரல்களை ஒத்தியிருக்கும் குரல்பதிவுகளை ஏன் விசாரிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

இது சமீபத்தில் காவல் துறையினரால் விசாரிக்கப்படாதது சர்ச்சையை கிளப்பியது.

இதற்கிடையில், அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி மற்றும் தமது குரலுக்கு ஒத்ததாக இருப்பதாகக் கூறப்படுவது, குற்றவியல் கூறுகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“இதுபோன்ற ஒரு விவகாரத்தை பிரச்சனையாக மாற்ற அரசாங்கம் விரும்புகிறது. பொருளாதார மந்தநிலை, அரசியல் கொந்தளிப்பு, இப்போது நிலவும் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

“மொகிதின் யாசின் குற்றம் சாட்டப்பட்ட குரல்பதிவுகள், ஊழல் அச்சுறுத்தல்கள், அரசாங்க நிறுவனங்களில் பதவிகள் மற்றும் பலவற்றைப் பற்றி சமூக ஊடகங்களில் பரவலாக பரப்பப்படுவதையும் நான் குறிப்பிட்டேன்.
விசாரணை இருக்கிறதா என்று நான் கேட்டேன்? அண்மையில் ஹம்சா சைனுடினின் குரல்பதிவும் பரப்பப்பட்டு வருகிறது.

“இது போன்ற விவகாரங்களில் விசாரணை தேவை,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.