Home உலகம் 60 மில்லியன் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை அமெரிக்கா பிற நாடுகளுக்கு அனுப்பும்

60 மில்லியன் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை அமெரிக்கா பிற நாடுகளுக்கு அனுப்பும்

779
0
SHARE
Ad

வாஷிங்டன்: அமெரிக்கா தனது 60 மில்லியன் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

மறுஆய்வுக்குப் பிறகு வரும் மாதங்களில் அவற்றை ஏற்றுமதி செய்ய முடியும். தடுப்பூசியை இதுவரை பொது பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கவில்லை என்றாலும், அமெரிக்காவின் கையிருப்பில் அது உள்ளது.

கடந்த மாதம் அதிபர் ஜோ பைடன் சுமார் நான்கு மில்லியன் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை மெக்ஸிகோ மற்றும் கனடாவுடன் பகிர்ந்து கொள்வதாக உறுதியளித்தார்.

#TamilSchoolmychoice

இந்தியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், அமெரிக்க சுகாதார வளங்களை பகிர்ந்து கொள்ள பைடன் நிர்வாகம் உறுதிபூண்டுள்ளது.

இந்திய தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு மூலப்பொருட்களை வழங்குவதாக அமெரிக்கா ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் திங்களன்று தொலைபேசி அழைப்பில், அதிபர் பைடன் “ஆக்ஸிஜன் தொடர்பான பொருட்கள், தடுப்பூசி பொருட்கள் மற்றும் சிகிச்சை முறைகள் உட்பட” அவசர உதவிக்கு உறுதியளித்தார் என்று வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.