Home நாடு காவல் துறை துணைத் தலைவரின் கூற்று தவறாக சித்தரிக்கப்பட்டுவிட்டது

காவல் துறை துணைத் தலைவரின் கூற்று தவறாக சித்தரிக்கப்பட்டுவிட்டது

643
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மாணவிக்கு எதிரான பாலியல் அச்சுறுத்தலை தாங்கள் ஒருபோதும் நகைச்சுவையாக கருதவில்லை என்று காவல் துறை இன்று வலியுறுத்தியது.

“நிருபர்களுக்கான பதில் அறிக்கையில் ‘ஒரு நகைச்சுவை‘ என்பது விசாரிக்கப்பட்டு வரும் அம்சமாகும். இது மலேசியாகினி மற்றும் சீனா பிரஸ் செய்தி தளங்களில் விவரிக்கப்பட்டுள்ளபடி இந்த பிரச்சனை ஒரு நகைச்சுவையானது என்று அர்த்தமல்ல.

“இந்த வழக்கின் எந்த அம்சமும் நகைச்சுவையாக கருதப்படவில்லை. காவல் துறை ஒவ்வொரு காவல் துறை புகாரையும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. மேலும், விரிவான விசாரணையை நடத்துவதற்கு எப்போதும் அர்ப்பணிப்பைக் கொடுக்கிறது,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இரண்டு செய்தித்தளங்களின் தலைப்புச் செய்திகள் குழப்பமானவை என்றும், ஷா ஆலாமில் நேற்று செய்தியாளர் சந்திப்பின் போது அக்ரில் கூறிய அறிக்கை குறித்த துல்லியமான உள்ளடக்கத்தை அது கொடுக்கவில்லை என்றும் ஸ்கந்தகுரு கூறினார்.