Home நாடு கணபதி மரணம் குறித்து உள்துறை அமைச்சு உடனடியாக விசாரிக்க வேண்டும்

கணபதி மரணம் குறித்து உள்துறை அமைச்சு உடனடியாக விசாரிக்க வேண்டும்

990
0
SHARE
Ad
சிவராஜ் சந்திரன்

கோலாலம்பூர்: கணபதியின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மஇகா அழைப்பு விடுத்துள்ளது. காவல் துறையால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டப் பின்னர் மருத்துவமனையில் அவர் சேர்க்கபட்டு பின்பு மரணமுற்றார்.

காவல் துறை புகார்கள் மற்றும் தவறான நடத்தை ஆணையம் (ஐபிசிஎம்சி) அமைப்பதன் முக்கியத்துவத்தை சமீபத்திய சம்பவம் நிரூபிக்கிறது என்று மஇகா உதவித் தலைவர் சிவராஜ் சந்திரன் இன்று ஓர் அறிக்கையில் வலியுறுத்தினார்.

“விசாரணைக்கு உதவுவதற்காக காவல் துறை தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட கணபதி செலாயாங் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப் பிறகு மரணமுற்றதை உள்துறை அமைச்சகத்தால் உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும்.

#TamilSchoolmychoice

“கணபதிக்கு மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான உரிமை மறுக்கப்பட்டது மற்றும் பலத்த காயம் ஏற்பட்டதால் தாக்கப்பட்டார் என்ற மறைந்தவரின் தாயார் கூறுவதை, உரிய கவனம் செலுத்தப்பட்டு உள்துறை அமைச்சகத்தால் பதிலளிக்கப்பட வேண்டும்.

“காவல் துறை தடுப்புக் காவலில் இருக்கும்போது ஏற்பட்ட மரணங்கள் அல்லது காயங்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் புதிதல்ல. இதுபோன்ற பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ள. இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதற்கு முடிவே இல்லை என்பது போல மீண்டும் மீண்டும் நிகழ்கிறது,” என்று அவர் கூறினார்.

“இந்த மரணம் ஐபிசிஎம்சியை உடனடியாக நிறுவுவதன் முக்கியத்துவத்தை மீண்டும் நிரூபிக்கிறது என்று நான் நம்புகிறேன். ஐபிசிஎம்சி மூலம் கொண்டு வரக்கூடிய நீதி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வது மட்டுமல்ல, காவல் துறையின் நற்பெயரை மேம்படுத்துவதில் முக்கியமானது,” என்று அவர் கூறினார்

கணபதி, 40, பிப்ரவரி 24 அன்று கைது செய்யப்பட்டார். அவர் மார்ச் 8- ஆம் தேதி விடுவிக்கப்பட்டார், ஆனால் செலாயாங் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.