Home இந்தியா கொவிட்-19: இந்திய ஆயுதப்படைகள் அவசர மருத்துவ உதவிக்கு அழைப்பு

கொவிட்-19: இந்திய ஆயுதப்படைகள் அவசர மருத்துவ உதவிக்கு அழைப்பு

469
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியாவில் கொவிட்-19 சம்பவங்கள் இன்று தொடர்ச்சியாக ஆறாவது நாளாக 300,000- க்கு மேல் பதிவாகி உள்ளன. அதே நேரத்தில் அதன் ஆயுதப்படைகள் அவசர மருத்துவ உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் 323,144 புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது திங்களன்று பதிவான 352,991-க்குக் கீழே உள்ளது. படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் வசதி பற்றாக்குறையால் நோயாளிகளைத் திருப்பி விடும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

இது 2,771 புதிய இறப்புகளைப் பதிவுசெய்தது, ஆனால் சுகாதார வல்லுநர்கள் இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகமாக இருப்பதாக நம்புகின்றனர்.

#TamilSchoolmychoice

தாய்லாந்து, சிங்கப்பூர், வங்காளதேசம், பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவில் அதிகமான தொற்று சம்பவங்கள் இருப்பதால் , தங்கள் எல்லைகளுக்குள் அதன் மக்கள் நுழைவதைத் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளன.

பேரழிவுகரமான நெருக்கடியை சமாளிக்க இந்தியா தனது ஆயுதப்படைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஆயுதப்படை இருப்புக்களில் இருந்து ஆக்ஸிஜன் வெளியிடப்படும் என்றும், ஓய்வுபெற்ற மருத்துவ பணியாளர்கள் சுகாதார வசதிகளில் சேருவார்கள் என்றும் தற்காப்புத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் திங்கட்கிழமை பிற்பகல் தெரிவித்தார்.