Home நாடு கொவிட்-19: 13 பேர் மரணம்- 2,733 சம்பவங்கள் பதிவு

கொவிட்-19: 13 பேர் மரணம்- 2,733 சம்பவங்கள் பதிவு

722
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 27) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 2,733 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதில் 2,728 பேர் உள்நாட்டினர் 5 பேர் வெளிநாட்டினிலிருந்து திரும்பியவர்கள் ஆவர். இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 398,451 ஆக அதிகரித்துள்ளன.

கடந்த ஒரு நாளில் மட்டும் 2,019 பேர் குணமடைந்து இல்லம் திரும்பியிருக்கின்றனர். தொற்றுகளில் இருந்து குணமாகி இல்லம் திரும்பியவர்களின் எண்ணிக்கை இதுவரையில் 371,575 ஆக அதிகரித்துள்ளது.

#TamilSchoolmychoice

இன்றைய நிலையில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 25,414 ஆகும். சிகிச்சை பெற்று வருபவர்களில் 294 பேர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கப்படுகிறது. அவர்களில் 138 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.

இன்று 13 பேர் மரணமடைந்ததைத் தொடர்ந்து இதுவரையிலான மரண எண்ணிக்கை 1,462- ஆக உயர்ந்துள்ளது.

மாநிலங்கள் அளவில் மிக அதிகமான சம்பவங்கள் 750 என்ற எண்ணிக்கையில் சிலாங்கூரில் பதிவாகி உள்ளன. கிளந்தானில் 484 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. சரவாக்கில் 432 புதிய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கோலாலம்பூரில் 377 சம்பங்கள் பதிவாகி உள்ளன. ஜோகூரில் 220 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.