Home நாடு மே 17 வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு- மாநில எல்லைகளைக் கடக்கத் தடை

மே 17 வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு- மாநில எல்லைகளைக் கடக்கத் தடை

524
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சிலாங்கூர், கோலாலம்பூர், ஜோகூர், பினாங்கு மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் உள்ள நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு இன்னும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

சபாவும் நாளை முதல் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு கீழ் வைக்கப்படும். ஐந்து மாநிலங்களில் மற்றும் கூட்டரசு பிரதேசத்தில் மே 17 வரை இந்தக் கட்டுப்பாடு நீடிக்கும்.

இதற்கிடையில், கிளந்தான் இன்னும் இரண்டு வாரங்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கீழ் இருக்கும்.

#TamilSchoolmychoice

அதே நேரத்தில் பெர்லிஸ், பகாங், கெடா, பேராக், திரெங்கானு, நெகிரி செம்பிலான், புத்ராஜெயா, லாபுவான் மற்றும் மலாக்கா ஆகிய மாநிலங்கள் மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு கீழ் வைக்கப்படும்.

இதன் மூலமாக மாநிலங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு  நோன்பு பெருநாளுக்கும் அதன் பிறகும் அனுமதி இல்லை.