Home இந்தியா தமிழ் நாடு நேரடியாக தடுப்பூசிகளை வாங்க முடிவு

தமிழ் நாடு நேரடியாக தடுப்பூசிகளை வாங்க முடிவு

571
0
SHARE
Ad

சென்னை : தமிழகத்தில் பரவி வரும் கொவிட்-19 தொற்றுகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தமிழ் நாடு அரசாங்கம் நேரடியாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய முடிவு செய்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“18 – 45 வயது வரை உள்ளவர்களுக்கு ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்துள்ள 13 லட்சம் கொவிட் தடுப்பூசிகள் போதுமானதாக இல்லை. எனவே, தேவையான தடுப்பூசிகளை உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி மூலம் இறக்குமதி செய்து குறுகிய காலத்திற்குள் அனைவருக்கும் செலுத்திட தமிழ்நாடு அரசு முடிவு எடுத்திருக்கிறது. ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்துள்ள 419 மெட்ரிக் டன் உயிர்வளியை (ஆக்சிஜன்) விடவும் தமிழகத்தில் கூடுதல் தேவை இருக்கிறது. பிற மாநிலத் தொழிற்சாலைகளிலிருந்து ரயில் மூலம் கொண்டு வந்து மருத்துவமனைகளுக்குச் சீராக விநியோகிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது” என ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.