Home கலை உலகம் ஆஸ்ட்ரோ : ‘பெண்கள் ரோக்’ இயக்குநர் விமலா பெருமாளுடன் சிறப்பு நேர்காணல்

ஆஸ்ட்ரோ : ‘பெண்கள் ரோக்’ இயக்குநர் விமலா பெருமாளுடன் சிறப்பு நேர்காணல்

785
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசையில் ஒளியேறிக் கொண்டிருக்கும் “பெண்கள் ரோக்” என்ற சாதனைப் பெண்மணிகளின் நேர்காணல்கள் பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

அந்த நிகழ்ச்சியின் இயக்குநரான டாக்டர் விமலா பெருமாள் தனது அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

பெண்கள் ரோக் நிகழ்ச்சியை இயக்கியதற்கான உங்களின் உத்வேகம் என்ன?

இந்நூற்றாண்டில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், போராட்டங்கள் மற்றும் சவால்களைச் சித்தரிக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி, பெண்கள் ரோக். வாழ்க்கையில் சவால்கள் இல்லாவிட்டால் வாழ்க்கைச் சுவாரசியமாக இருக்காது, சிலருக்குப் பிரச்சினைகள் ஒரு பெரியச் சுமையாக இருக்கலாம்.

டாக்டர் விமலா பெருமாள்
#TamilSchoolmychoice

மேலும், அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிகளைத் தேடுவதில் நம்பிக்கையையும் இழக்கலாம். நாம் எதிர்ப்பார்த்த அளவிற்கு அச்சிக்கல்களுக்கானத் தீர்வுகள் இல்லாவிட்டாலும் ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வு இருப்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

இரசிகர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைச் செவ்வெனக் கையாளும் வழிமுறைகள், அச்சிக்கல்களைக் களைவதற்கானத் தகவல்கள் மற்றும் நிபுணத்துவ உதவிகள் ஆகியவற்றைப் பெண்கள் ரோக் நிகழ்ச்சியின் வழி சித்தரிக்க நாங்கள் விரும்புகிறோம்.

வாழ்க்கையின் பிரகாசமானப் பக்கத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்பதை ஆதரிக்கும் வண்ணம் நிகழ்ச்சி மிகவும் துடிப்பான வகையில் வழங்கப்படும். ஏனெனில், வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்கும் நேர்மறைச் சக்திகள் நமக்குத் தேவையானத் தீர்வுகளுக்கு வழிவகுக்கும்.

இக்கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இடம்பெற்ற விருந்தினர்களைத் தேர்ந்தெடுத்தச் செயல்முறைகள் எவ்வாறு இருந்தன?

ஆராய்ச்சி மற்றும் கலந்துரையாடல் அங்கத்திற்கு முன்மொழியப்பட்டத் தலைப்பின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் விருந்தினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்டக் கலந்துரையாடல் தலைப்புகளுக்குப் தகுந்தப் புகழ்பெற்ற விருந்தினர்களைப் பற்றியத் தகவல்களைச் சேகரிக்க நாங்கள் அரசு சார்பற்ற அமைப்புகள் மற்றும் ஊடக நண்பர்களைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புக் கொண்டதோடுத் தனிப்பட்ட முறையிலும் சந்தித்தோம்.

இரசிகர்கள் கலந்துரையாடலிலிருந்து முழுமையானத்  தகவல்களைப் பெறுவதை உறுதி செய்யும் நோக்கில் நிபுணர்களை நாங்கள் மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுத்தோம். பெறப்பட்ட தகல்களைக் கவனமாகப் பகுப்பாய்வுச் செய்ததோடு, ஒவ்வொரு விருந்தினரின் தொழில் குறித்தும், அவர்களின் அனுபவத்தைப் பற்றியும் சில அடிப்படை ஆராய்ச்சிகளை மேற்கொண்டோம்.

பெண்கள் ஐகான்களைப் பொறுத்தவரைச், சமுதாயத்திற்கு மகத்தானப் பங்களிப்பை வழங்கியப் பெண்களை ஊக்குவிக்கும் வண்ணம் அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கியதோடு மரியாதை செய்தோம்.

இது முதல் சீசன் என்பதால் வயது அடிப்படையில் மூத்த ஐகான்களை கௌரவிக்க முடிவுச் செய்ததோடு அவர்களின் நேர வசதியையும் கருத்தில் கொண்டோம். நிகழ்ச்சி, விருந்தினர்களுடனானக் கருத்துப் பரிமாற்றத்திற்கு முக்கியத்துவம் வழங்கினாலும் இரசிர்களுக்கு ஒரு சிறந்தப் பொழுதுபோக்கு அங்கத்தை வழங்கவும் ஆடை வடிவமைப்புத் துறையில் ஈடுபட்டுள்ளப் புதிய திறமைசாலிகளை ஊக்குவிக்கவும் ஒவ்வொரு அத்தியாயமும் அத்துறையில் புகழ்பெற்ற மற்றும் வளர்ந்து வரும் தேர்ந்தெடுக்கப்பட்ட வடிவமைப்பாளர்களைத் தாங்கி மலரும்.

இக்கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கான உங்களின் சில நம்பிக்கைகள் யாவை?

இந்நிகழ்ச்சி இன்றைய தலைமுறையைச் சார்ந்தப் பெண்கள் எதிர்கொள்ளும் சில பிரச்சினைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதோடுத் தேவையானத் தகவல்கள், அப்பிரச்சனைகளைப் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அவற்றை களைவதற்க்கானத் தீர்வுகள் போன்றவற்றை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இரசிகர்களுக்கு விரிவானத் தீர்வுகளை வழங்கும் வண்ணம் இந்த நிகழ்ச்சி முக்கியத் தலைப்புகளைச் சித்தரிப்பதோடு ஒவ்வொரு அத்தியாயமும் அத்தலைப்புகளைச் சார்ந்த வெவ்வேறு விஷயங்களை விவரிக்கும். வாழ்க்கையில் பல வெற்றி தோல்விகள் இருந்தாலும் சிறந்த வாழ்க்கையை வாழ நமக்கு வேடிக்கையும் மகிழ்ச்சியும் முக்கியம் என்பதைக் கருத்தில் கொண்டு ஒரு மகிழ்ச்சியான, வண்ணமயமான மற்றும் துடிப்பான கருப்பொருளுடன் மலரும்  இந்நிகழ்ச்சியின் வழி இரசிகர்கள் பல அற்புதமான மற்றும் அறிவார்ந்த அனுபவத்தைப் பெறுவர் என்று நாங்கள் நம்புகிறோம்.