Home நாடு கொவிட்-19 : புதிய தொற்றுகள் 4,865 – மீண்டும் உயர்ந்தது – சிலாங்கூர் தொடர்ந்து முதலிடம்

கொவிட்-19 : புதிய தொற்றுகள் 4,865 – மீண்டும் உயர்ந்தது – சிலாங்கூர் தொடர்ந்து முதலிடம்

1015
0
SHARE
Ad

noor-hisham-health-min-07072020கோலாலம்பூர் : இன்று திங்கட்கிழமை (மே 18) வரையிலான ஒருநாளில்  கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 4,865 ஆக மீண்டும் உயர்ந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து  நாட்டில் இதுவரையில் பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 479,421 ஆக உயர்ந்திருக்கிறது.

மாநிலங்கள் ரீதியாக மிக அதிகமான தொற்றுகளைக் கொண்ட மாநிலமாக சிலாங்கூர் 1,743 தொற்றுகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது.

#TamilSchoolmychoice

512 தொற்றுகளுடன் சரவாக் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மற்ற மாநிலங்கள் வாரியான தொற்றுகளின் எண்ணிக்கையை மேற்காணும் வரைபடத்தில் காணலாம்.

கோலாலம்பூரில் மட்டும் 477 தொற்றுகள் பதிவாகி இருக்கின்றன. இன்றைய மொத்த ஒருநாள் தொற்றுகளில் ஏறத்தாழ பாதி தொற்றுகள் சிலாங்கூர், கோலாலம்பூர் மாநிலங்களில் பதிவானவை ஆகும்.