கோலாலம்பூர்: 2018 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பெவிலியன் ரெசிடென்ஸில் காவல்துறையினர் கைப்பற்றிய 114 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை பறிமுதல் செய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சியை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
சட்டத்துறை அலுவலகம், 114 மில்லியன் ரிங்கிட் பணம் 1எம்டிபியிலிருந்து தோன்றியது என்பதை நிரூபிக்க தவறிவிட்டது என்று நீதிபதி முகமட் ஜமில் ஹுசின் அறிவித்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஒரு குற்றவியல் நம்பிக்கை மோசடி குற்றத்திலிருந்து பெறப்பட்ட நிதி என்பதை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது என்றும் அவர் கூறினார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒபியு ஹோல்டிங்ஸ் செண்டெரியான் பெர்ஹாட்டுக்கு சொந்தமான வளாகத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 114,164,393.44 ரொக்கம் மற்றும் நகைகள் மற்றும் உயர்நிலை அலங்காரப் பொருட்களை பறிமுதல் செய்ய அரசாங்கம் முயற்சித்தது.
அப்பணமும் பொருட்களும் 1எம்டிபியுட்ன இணைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.