Home வணிகம்/தொழில் நுட்பம் பேங் ஆப் அமெரிக்கா: குறைந்தபட்ச ஊதியமாக ஒரு மணி நேரத்திற்கு 25 டாலரை அறிவித்தது

பேங் ஆப் அமெரிக்கா: குறைந்தபட்ச ஊதியமாக ஒரு மணி நேரத்திற்கு 25 டாலரை அறிவித்தது

911
0
SHARE
Ad

நியூ யார்க்: பேங் ஆப் அமெரிக்கா தனது குறைந்தபட்ச ஊதியத்தை ஒரு மணி நேரத்திற்கு 25 அமெரிக்க டாலராக (103.44 ரிங்கிட்) உயர்த்துவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளது. செவ்வாயன்று அமெரிக்க நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 15 அமெரிக்க டாலர்களையாவது செலுத்த வேண்டும் என்று அது கூறியுள்ளது.

ஊழியர்களுக்கான சம்பள உயர்வு 2025- க்குள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அது தெரிவித்துள்ளது. மார்ச் 2020- இல், அமெரிக்க வங்கி அதன் குறைந்தபட்ச ஊதியத்தை ஒரு மணி நேரத்திற்கு 20 அமெரிக்க டாலராக உயர்த்தியது.

“பொறுப்புள்ள வளர்ச்சியின் ஒரு முக்கிய அம்சம், வேலை செய்வதற்கான சிறந்த இடமாக இருப்பதற்கான எங்கள் உறுதிப்பாடாகும். அதாவது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் ஊழியர்களுக்கு உதவுவது,” என்று தலைமை மனிதவள அதிகாரி ஷெரி ப்ரோன்ஸ்டைன் கூறினார்.

#TamilSchoolmychoice

“அவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் உதவ வலுவான ஊதியம் மற்றும் போட்டி நன்மைகளை வழங்குவதும் இதில் அடங்கும். இதனால் நாங்கள் தொடர்ந்து சிறந்த திறமைகளை ஈர்க்கவும் தக்கவைத்துக் கொள்ளவும் செய்கிறோம்,” என்று அவர் கூறினார்.