Home நாடு சிவபாலன் மாரடைப்பால் காலமானார்- காவல் துறை

சிவபாலன் மாரடைப்பால் காலமானார்- காவல் துறை

526
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பாதுகாப்பு காவலர் சிவபாலன் சுப்பிரமணியம் மீது நடத்திய பிரேத பரிசோதனையில் 43 வயதான அவர் மாரடைப்பால் இறந்தார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக சிலாங்கூர் காவல்துறை தலைவர் அர்ஜுனைடி முகமட் தெரிவித்துள்ளார்.

பிரேத பரிசோதனையில் சிவபாலன் எந்தவிதமான உடல் காயங்களுக்கும் ஆளாகவில்லை என்பதைக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவர் இறந்ததற்கான காரணம் குறித்து அவரது குடும்பத்தினருக்கு மருத்துவமனை அறிவித்துள்ளது என்றும் அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

“இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. விசாரணை ஆவணங்கள் பின்னர் நிறைவு செய்யப்பட்டு, அவரது மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற முன்மொழிவுடன் துணை அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்படும், ” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, சிவபாலன் கோம்பாக் மாவட்ட காவல் துறை தலைமையகத்திற்கு அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது ஆணைக் காரணமாக கைது செய்யப்பட்ட என்றும், விசாரணைக்காக இல்லை என்றும் அர்ஜுனைடி கூறினார்.

காவல் துறையினருக்கு முழு ஒத்துழைப்பை வழங்கியதால் பாதுகாப்புப் பணியாளர் காலை 11.20 மணியளவில் கைவிலங்கு இல்லாமல் ஒரு தொழிற்சாலையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார் என்றார். இருப்பினும், சிவபாலனுக்கு காலை 11.40 மணிக்கு காவல் நிலையத்திற்கு வந்தபின் மூச்சுத் திணறல் ஏற்படத் தொடங்கியது.