Home One Line P1 இந்தியா, தென்னாப்பிரிக்கா பிறழ்வுகள் ஆபத்தானது

இந்தியா, தென்னாப்பிரிக்கா பிறழ்வுகள் ஆபத்தானது

662
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஆசியான் வட்டாரத்தில் புதிய வகை கொவிட்-19 பிறழ்வுகள் கண்டறியப்பட்டுள்ளதால், அப்புதிய வகைகள் மலேசியாவிற்குள் நுழையாமல் இருக்க நாட்டின் எல்லைகளை கட்டுப்படுத்த வேண்டும்.

சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், மலேசியாவில் இதுவரை நான்கு புதிய பிறழ்வுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, அதாவது பிரிட்டன், இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா பிறழ்வுகள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறினார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்-19 தொடர்பில் மலேசியாவில் பதிவான மொத்த மரணங்கள் 79 ஆகும். கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 6,999 ஆகக் குறைந்தன. சனிக்கிழமை வரையிலான ஒரு நாளில் வரலாற்றிலேயே உச்ச பட்சமாக 9,020 ஆக கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை உயர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.