Home இந்தியா கொவிட் கவச உடையோடு நோயாளிகளைச் சந்தித்த ஸ்டாலின்

கொவிட் கவச உடையோடு நோயாளிகளைச் சந்தித்த ஸ்டாலின்

603
0
SHARE
Ad

கோயம்புத்தூர் : கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை ஈஎஸ்ஐ  மருத்துவமனையின் கொரோனா நோயாளிகள் பிரிவில் நலம் பெற்று வருபவர்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை (மே 30) தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரொனா பாதுகாப்பு உடை அணிந்து  அணிந்து சென்று, அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

“மருந்தோடு சேர்த்து மற்றவர்கள் ஊட்டும் நம்பிக்கையும் ஆறுதலும் நோயைக் குணப்படுத்தும். தமிழக அரசு நம்பிக்கை ஊட்டும்! கொவிட்-19 வார்டுக்குள் செல்ல வேண்டாம் என்று அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும் தம் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன்! இப்பெருந்தொற்றை நாம் வெல்வோம்!” என ஸ்டாலின் தனது சமூக ஊடகப் பக்கபின்னர் கோவையில் நடைபெற்ற கொவிட்-19 தொடர்பான ஆய்வுக் கூட்டத்திலும் ஸ்டாலின் கலந்து கொண்டு நிலைமையை நேரடியாகக் கண்டறிந்தார்.