கோலாலம்பூர்: இங்குள்ள உயர்நீதிமன்றத்தில் 1எம்டிபி நிதி தொடர்பான ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட வழக்கு ஜூன் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு முதலில் நேற்று (ஜூன் 1) தொடர திட்டமிடப்பட்டது, ஆனால் நேற்று தொடங்கிய 14 நாட்கள் முழு கட்டுப்பாட்டை அடுத்து இது ஒத்திவைக்கப்பட்டது.
“முழு கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படாவிட்டால், ஜூன் 21- ஆம் தேதி நீதிபதி கொலின் லாரன்ஸ் செக்குவேரா முன் விசாரணை தொடரும்,” என்று துணை அரசு வழக்கறிஞர் அகமட் அக்ரம் கரிப் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.
நஜிப்பின் வழக்கறிஞர், வான் ஐசுடின் வான் முகமட், 10- வது அரசு தரப்பு சாட்சியான முகமட் ஹஸீம் அப்துல் ரஹ்மான் (49), 1எம்டிபியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியின் வழக்கு விசாரணை பின்னர் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.