Home இந்தியா வாலு தலைப்பு எனக்குதான், சிம்புவுக்கு அதிர்ச்சி தரும் வேறொரு இளைஞர்

வாலு தலைப்பு எனக்குதான், சிம்புவுக்கு அதிர்ச்சி தரும் வேறொரு இளைஞர்

520
0
SHARE
Ad

simbuசென்னை, ஏப்ரல் 19-உலகத்துல இப்படி ஒரு பேரதிர்ச்சியை அடுத்தடுத்து கொடுப்பார்கள் என்று தயாரிப்பாளர் சங்கம் கனவிலும் நினைத்திருக்காது.

தொடர்ந்து ஒரே பட தலைப்பை பலர் வைத்துக் கொண்டு கோதாவில் குதித்து வருவதால் சங்கத்திற்கு சரியான கெட்டப் பெயர். இதை எப்படி நீக்குவது என்று மிக ஈஸியாக முடிவெடுத்து விடலாம்தான். ஆனால் அவர்களுக்குதான் ஒருவர் காலை மற்றவர் உருவிவிடுகிற வேலையே பெரிதாக இருக்கிறதே?

சரி, இப்போதென்ன பிரச்சனை? கடந்த இரண்டு நாட்களாக வாலு என்ற படத்தின் விளம்பரங்கள் நாளிதழ்களில் வெளியிடப்பட்டு வருகிறது. அட… நமக்கு பரிச்சயமான வாலு என்று விளம்பரத்தை நோக்கும் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி. அதில் சிம்புவின் படம்தானே இருக்க வேண்டும்? ஆனால் வேறொரு வாலிபர் ஒரு பெண்ணை இருக்கி பிடித்துக் கொண்டு நிற்கிறார். அதற்கப்புறம் டைரக்டர், தயாரிப்பு நிறுவனம் எல்லாவற்றையும் படித்தால் தலை கிர்ரடிக்கிறது. இது வேறு வாலு. அப்படியென்றால் சிம்புவின் வாலு? இந்த பெருங்குழப்பத்திற்கு விடை தேட புறப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு கிடைத்த பதில்தான் வழக்கம் போல கேலிக் கூத்தானது. இருவருமே இதை நாங்கதான் பதிவு பண்ணி வச்சுருக்கோம் என்று கொடி துக்கிவிட்டார்கள். இனிமேல் விசாரணை கமிட்டி வைத்து யாருக்கு வாலு என்று முடிவு செய்ய வேண்டியது கோர்ட்டா? அல்லது தயாரிப்பாளர் சங்கமா என்பது அவ்விருவரின் வெளிப்புற செல்வாக்கை பொறுத்த விஷயம்.

#TamilSchoolmychoice

இனிமேலாவது உருப்படியாக ஒரு திட்டம் வகுத்து இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைங்க, ரொம்ப போரடிக்குது!