Home கலை உலகம் அப்படி செஞ்சா அது சசிக்கு செய்யுற துரோகம் : பரத்

அப்படி செஞ்சா அது சசிக்கு செய்யுற துரோகம் : பரத்

584
0
SHARE
Ad

bharathசென்னை, ஏப்ரல் 19- தமிழ்சினிமாவில் சிக்ஸ் பேக் கலாச்சாரம் வந்து உடம்பையும் கெடுத்து படத்தையும் கெடுத்துக் கொண்டிருக்கிறது.

அழகான சாக்லெட் பாய்கள் எல்லாரும் கன்னம் ஓட்டி தாவங்கட்டை தடிப்பாகி திரிந்தார்கள். இந்த பொழப்பு நமக்கு ஆகாது என்று நொடிப் பொழுதில் அவர்களை சுதாரிக்க வைத்தது இந்த சிக்ஸ் படங்களின் படுதோல்விகள்தான்.

எல்லாரும் ஓட்டு கெட்டப்புக்கு தாவுற நேரத்தில் பரத் எதற்காக சிக்ஸ் பேக் பயிற்சி செய்தார் என்பதை பரத்திடம் கேட்பதற்கு பதிலாக அவரை அப்படி வருத்தி எடுத்த டைரக்டர் சசியிடம் கேட்பதே உத்தமம். கேட்டால், படத்தை பார்ப்பதற்கு முன்பே எதையும் எடை போடாதீங்க, பார்த்துட்டு சொல்லுங்க என்றார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் தனது சிக்ஸ்பேக் சசிக்கு மட்டுமே என்பதில் மிக மிக தெளிவாக இருந்திருக்கிறார் பரத். எப்படி? பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த கில்லாடி படத்தை மீண்டும் தூசு தட்டி எடுத்துக் கொண்டிருக்கிறார் டைரக்டர் வெங்கடேஷ். இப்படத்தின் ஹீரோவான பரத் போடும் ஒரு சண்டைக்காட்சியை இப்போதுதான் எடுத்தார்கள். சசி படத்திற்காக பரத் வைத்திருக்கும் சிக்ஸ்பேக் அழகை கவனித்த வெங்கடேஷ், ஒரு சீன்ல சட்டையை கழற்றிட்டு சண்டை போடுங்க என்றாராம்.

ம்ஹூம் முடியவே முடியாது. அது சசி சாருக்கு செய்யுற துரோகம் என்று பட்டனை இறுக்கி போட்டுக் கொண்டாராம் பரத். தோற்கும் போதுதான் சிலருக்கு தோழமை புரிகிறது.