Home இந்தியா அரபு நாடுகளில் தவிக்கும் இந்தியர்கள் பிரச்சனையைத் தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை! : வயலார் ரவி

அரபு நாடுகளில் தவிக்கும் இந்தியர்கள் பிரச்சனையைத் தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை! : வயலார் ரவி

495
0
SHARE
Ad

Vayalar-Raviசென்னை, ஏப்ரல் 19-வெளிநாடுகளில் வசிக்கும்  இந்தியர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று மத்திய அமைச்சர் வயலார் ரவி கூறியுள்ளார்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி, நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது, “சவூதி அரேபியா  உட்பட அரபு நாடுகளில் இந்தியர்கள் 24 லட்சம் பேர் வசிக்கின்றனர். அவர்களில்  20 லட்சம் பேர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் 4 லட்சம் பேருக்கு பிரச்சனை ஏற்பட்டது. இதில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு பேசியதன் விளைவாக 2 லட்சம் பேரின் பிரச்சனை தீர்ந்து விட்டது.

மீதமுள்ளவர்கள் சட்ட விரோதமாக அரபு நாடுகளில் குடியேறியவர்கள். சுற்றுலா விசாவில் சென்று நிரந்தரமாக குடியேறியவர்கள். போலி ஆவணங்கள் மூலம் சென்று தங்கியவர்கள் என்பதால் அவதிப்படுகின்றனர். ஆனாலும் அவர்கள் நலனிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. அரபு நாடுகளில் உள்ள நமது நாட்டு தூதரக அதிகாரிகள் மூலம் அந்தந்த நாடுகளில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

#TamilSchoolmychoice

அதுமட்டுமின்றி டெல்லியில் இருக்கும் அரபு நாடுகளின் தூதர்களிடமும் இந்திய வெளியுறவுத் துறை மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சக, அதிகாரிகள் பேசிக்கொண்டுள்ளனர். அனவே அவர்களுக்கு பிரச்சனை எதுவும் ஏற்படாதவாறு பிரச்சனை சுமுகமாகத் தீர்ந்து வைக்கப்படடும்.” என்று அவர் கூறியுள்ளார்.