Home 13வது பொதுத் தேர்தல் முதலில் ராக்கெட் சின்னம் – நிராகரித்தால் பாஸ் அல்லது பிகேஆர் சின்னம் – ஜசெக முடிவு!

முதலில் ராக்கெட் சின்னம் – நிராகரித்தால் பாஸ் அல்லது பிகேஆர் சின்னம் – ஜசெக முடிவு!

534
0
SHARE
Ad

Lim Guan Engகோலாலம்பூர், ஏப்ரல் 19- நாளை நடைபெறவுள்ள வேட்புமனு தாக்கலின் போது ஜ.செ.க. கட்சி வேட்பாளர்கள் ராக்கெட் சின்னத்தில் போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டால் அவர்கள் பி.கே.ஆர். அல்லது பாஸ் சின்னத்தில்  போட்டியிடுவர் என்று ஜசெக கட்சியின் தலைமை பொது செயலாளர் லிம் குவான் எங் அறிவித்துள்ளார்.

சங்கங்களின் பதிவதிகாரி அனுப்பிய கடிதத்தால் ஏற்பட்டுள்ள குழப்பங்களால் மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் காணப்பட்ட லிம் இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்பொழுது ஜ.செ.க. வேட்பாளர்கள் நாளை ராக்கெட் சின்னத்தில் வேட்புமனு தாக்கல் செய்வர் என்றும், அவர்களின் வேட்புமனு நிராகரிக்கப்படும் பட்சத்தில், அந்த வேட்பாளர்கள் பாஸ் அல்லது கெஅடிலான் கட்சி சின்னத்தில் போட்டியிட அனுமதி கடிதத்தை கையில் வைத்திருப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

கடந்த டிசம்பர் மாதம் நடந்த ஜசெக தேர்தலில் நடைபெற்ற குளறுபடி குறித்து இதுநாள் வரை விசாரிக்காத சங்கங்களின் பதிவிலாகா வேட்புமனு தாக்கல் செய்ய இரண்டு நாட்கள் இருக்கும் தருவாயில் இவ்வாறு செய்யலாமா? என்று பல தரப்பினர் நாடு முழுக்க கேள்வி எழுப்பியுள்ளனர்.

மலேசிய வரலாற்றிலேயே இதுவரை நடைபெற்றிராத அளவிற்கு சங்கங்களின் பதிவதிகாரி, வேட்பு மனுத் தாக்கலுக்கு இரண்டு நாட்கள் இருக்கும்போது  மேற்கொண்ட நடவடிக்கையால் நாடே கொந்தளித்திருக்கின்றது.

தேசிய முன்னணி அரசாங்கத்தின் இந்த செயலால் நடுநிலை வாக்காளர்களின் வாக்குகள் தேசிய முன்னணிக்கு எதிராக விழும் என்றும் குறிப்பாக சீன வாக்காளர்களின் வாக்குகள் முழுக்க முழுக்க மக்கள் கூட்டணிக்கு ஆதரவாக விழும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.