Home நாடு அரசாங்கம் தோல்வியடைந்ததை மாமன்னரிடம் கூறினேன்- குவான் எங்

அரசாங்கம் தோல்வியடைந்ததை மாமன்னரிடம் கூறினேன்- குவான் எங்

683
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோயை அரசாங்கம் முறையாக கையாளவில்லை என்ற கூற்றுக்கள் குறித்து மாமன்னர் நன்கு அறிந்திருக்கிறார் என்று ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

“கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமல்லாமல், மக்களின் கருத்தையும் நான் தெரிவித்தேன். மாமன்னர் புரிந்துகொண்டார். நாங்கள் அதை அவருடைய முடிவிற்கு விட்டு விடுகிறோம்,” என்று மாமன்னரைச் சந்தித்தப் பிறகு செய்தியாளர்களிடம் குவான் எங் கூறினார்.

இன்று இஸ்தானா நெகாராவில் சுமார் 80 நிமிடங்கள் மாமன்னருடனான தனது கலந்துரையாடல்கள் பெரும்பாலும் பொருளாதாரம், கொவிட் -19 மற்றும் மக்களுக்கான உதவி ஆகியவற்றை மையமாகக் கொண்டிருந்தன என்றார்.

#TamilSchoolmychoice

அவசரகாலத்தில் நாடாளுமன்றம் கூட்ட முடியாததால், அவர்களின் கவலைகளை வெளிப்படுத்தும் மக்களின் நம்பிக்கையை மாமன்னர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்று லிம் மேலும் கூறினார்.