Home நாடு மாகெரான் திட்ட முன்மொழிவை நம்பிக்கை கூட்டணி நிராகரித்தது

மாகெரான் திட்ட முன்மொழிவை நம்பிக்கை கூட்டணி நிராகரித்தது

541
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட்டின், தேசிய நடவடிக்கை மன்றத்தை (மாகெரான்) மீண்டும் நிறுவுவதற்கான முன்மொழிவை நம்பிக்கை கூட்டணி தலைவர்கள் மன்றம் இன்று நிராகரித்தது.

நாடாளுமன்ற ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் கட்சியாக அவர்களின் கொள்கைகளுக்கு இது எதிரானது என்று நம்பிக்கை கூட்டணி இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அரசியல் மற்றும் கொவிட் -19 தொடர்பான பிரச்சனைகள் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற கூட்டத்தொடரை மீண்டும் நடத்துவதே நாட்டிற்கு தேவை என்பதை அவர்கள் வலியுறுத்தினர்.

#TamilSchoolmychoice

“அவசரநிலை உடனடியாக முடிவுக்கு வர வேண்டும். இப்போது நாடாளுமன்றம் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்ற எங்கள் நிலையான நிலைப்பாட்டின் அடிப்படையில் மாகெரானின் திட்டத்தை நம்பிக்கை கூட்டணி நிராகரிக்கிறது.

“கொவிட்-19 பாதிப்புக் காரணமாக மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுக் காண, பொருளாதாரம் மற்றும் அரசியல் ஜனநாயகம் சிறப்பாக செயல்பட, மக்களின் குரலைக் கேட்டு தீர்வு காண சிறந்த இடம் நாடாளுமன்றமே,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், அமானா தலைவர் முகமட் சாபு மற்றும் ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

நேற்று, டாக்டர் மகாதீர் 1969- ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட தேசிய நடவடிக்கை மன்றத்திற்கு (மாகெரான்) ஒத்த ஒரு புதிய அரசாங்கத்தை அல்லது அதிகாரத்தை நிறுவ முன்மொழிந்தார்.

கடந்த காலங்களில் நாட்டின் அரசியல் நிலைமைக்கு ஒரு தீர்வை வழங்குவதில் மாகெரான் நிறுவப்பட்டு வெற்றியும் பெற்றது என்று முன்னாள் பிரதமர் விளக்கினார்.