Home நாடு விக்னேஸ்வரன் மாமன்னரைச் சந்தித்தார்

விக்னேஸ்வரன் மாமன்னரைச் சந்தித்தார்

1031
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனும் அரசியல் கட்சித் தலைவர்களின் வரிசையில் மாமன்னரைச் சந்திக்க அரண்மனையை வந்தடைந்தார்.

சுமார் ஒரு மணிநேர சந்திப்பிற்குப் பிறகு காலை 11:38 மணியளவில் அரண்மனையிலிருந்து வெளியேறினார்.

முன்னதாக, தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சியான மசீசவின் தலைவர் வீ கா சியோங்கை மாமன்னர் நேற்று வியாழக்கிழமை சந்தித்தார்.

#TamilSchoolmychoice

கடந்த புதன்கிழமை (ஜூன் 9) தொடங்கி வரிசையாக பல அரசியல் தலைவர்களை மாமன்னர் சந்தித்தார். நேற்று வியாழக்கிழமை (ஜூன் 10) பிற்பகல் 2.00 மணியளவில் மாமன்னரைச் சந்தித்த முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் அதன் பின்னர் இயங்கலை வழியான பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்தினார்.

முதல் தலைவராக புதன்கிழமை காலையில் பிரதமர் மொகிதின் யாசினைச் சந்தித்த மாமன்னர், அதன் பிறகு அன்வார் இப்ராகிம், ஜசெகவின் லிம் குவான் எங், அமானா கட்சியின் முகமட் சாபு ஆகியோரையும் சந்தித்தார்.