Home நாடு தாம் ‘பாபாகோமோ’ இல்லை என அம்னோ இளைஞர் அறிவிப்பு

தாம் ‘பாபாகோமோ’ இல்லை என அம்னோ இளைஞர் அறிவிப்பு

400
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோ இளைஞர் பிரிவு செயற்குழு உறுப்பினர் வான் முகமட் அஸ்ரி வான் டெரிஸ், தாம்தான் பாபாகோமோ என மறுத்துள்ளார்.

முன்னாள் நிதி அமைச்சர் லிம் குவான் எங் மற்றும் அவரது மகன் கிளின்ட் லிம் வே சௌ ஆகியோரின் அவதூறு வழக்குக்கு எதிரான தற்காப்பு அறிக்கையில் அவர் இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் 16-ஆம் தேதி, ஓர் ஊடக அறிக்கை மூலம், தன்னைப் பற்றியும் அவரது மகன் பற்றியும் தவறான செய்திகளைப் பரப்பியதாகக் கூறி அஸ்ரி மற்றும் இன்னும் சிலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு தனது வழக்கறிஞருக்கு அறிவுறுத்தியதாக லிம் கூறினார்.

#TamilSchoolmychoice

கிளின்ட் அறிவிக்கப்படாத 2 மில்லியன் ரிங்கிட் பணத்தை சிங்கப்பூருக்கு எடுத்துச் சென்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இருவரும் கடந்த ஆண்டு அக்டோபர் 15- ஆம் தேதி பினாங்கு உயர் நீதிமன்றத்தில் அஸ்ரிக்கு எதிராக அவதூறு வழக்குத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு கடந்தாண்டு மார்ச் 14 தேதியிட்ட முகநூல் பதிவை மையமாகக் கொண்டது.