வாஷிங்டன்: அமெரிக்காவில் நடத்தப்பட்ட கொவிட்-19 தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையின் இறுதி கட்ட தரவில், நோவாவாக்ஸ் தொற்றுக்கு எதிராக 90 விழுக்காட்டிற்கும் அதிகமான செயல்திறனைக் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரதத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த தடுப்பூசி, கொவிட்-19 இன் முக்கிய பிறழ்வுக்கு 93 விழுக்காட்டிற்கும் மேலாக செயல்படுவதாக விஞ்ஞானிகள் மற்றும் பொது சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மருத்துவ ஆய்வில் அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவில் கிட்டத்தட்ட 30,000 தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.
2021- ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் அமெரிக்காவிலும், பிற நாடுகளிலும் அவசரகால பயன்பாட்டு ஒப்புதல்களை விரைவுபடுத்த நோவாவாக்ஸ் தயாராகுகிறது.
நோவாவாக்ஸ் 2021- ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மாதத்திற்கு 100 மில்லியன் தடுப்பூசியையும், இந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் மாதத்திற்கு 150 மில்லியன் தடுப்பூசியையும் உற்பத்தி செய்வதில் நம்பிக்கை கொண்டுள்ளது.