Home நாடு தடுப்பூசிகள் போட்டுக் கொள்ளாத ஆசிரியர் நேரடிப் பாடம் நடத்த முடியாது

தடுப்பூசிகள் போட்டுக் கொள்ளாத ஆசிரியர் நேரடிப் பாடம் நடத்த முடியாது

612
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாடெங்கிலும் உள்ள பள்ளிகள் திட்டமிட்டபடி அக்டோபர் 3-ஆம் தேதி திறக்கப்படுகின்றன என கல்வி அமைச்சர் முகமட் ராட்சி முகமட் ஜிடின் அறிவித்துள்ளார். அதன்பின்னர் பள்ளிகளில் நேரடிப் பாடங்களும் நடத்தப்படும்.

இஸ்மாயில் சாப்ரி அமைச்சரவையில் ராட்சி ஜிடின் மீண்டும் கல்வி அமைச்சராக நியமனம் பெற்றிருக்கிறார்.

அண்மையில் விடுத்த அறிக்கையில் ராட்சி ஜிடின் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதை உறுதிப்படுத்தினார்.

தடுப்பூசி போட்டுக் கொள்ளாத ஆசிரியர்கள் நேரில் பாடம் நடத்த முடியாது

#TamilSchoolmychoice

நாடெங்கிலும் சுமார் 2,500 ஆசிரியர்கள் இன்னும் தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ளவில்லை எனவும் ராட்சி  ஜிடின் தெரிவித்துள்ளார்.

இந்த ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ளும்வரை பள்ளி வகுப்பறைகளில் நேரடியாகப் பாடங்களை நடத்த அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் ராட்சி ஜிடின் தெரிவித்தார்.

எனினும் சுமார் 400 ஆயிரம் ஆசிரியர்கள் பணியில் இருக்கும் நிலைமையில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவானதே எனவும் அவர் கூறினார்.

சில ஆசிரியர்கள் மருத்துவ காரணங்களுக்காக தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. மேலும் சிலர் தடுப்பூசியின் தன்மை, அதன் பலன்கள் காரணமாக போட்டுக் கொள்ள மறுத்து வருகின்றனர் என்றும் ராட்சி ஜிடின் தெரிவித்தார்.