Home நாடு “தேசிய முன்னணியோடு இணைந்திருப்போம்” – சரவணன் கூறுகிறார்

“தேசிய முன்னணியோடு இணைந்திருப்போம்” – சரவணன் கூறுகிறார்

777
0
SHARE
Ad

கோலாலம்பூர் : தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சிகளில் ஒன்றான அம்னோவுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் எப்போதும் தேசிய முன்னணியோடு இணைந்திருப்போம் என மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் கூறியுள்ளார்.

அண்மையில் மஇகாவுக்கும், அம்னோவுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள், மோதல்கள் குறித்து மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் கருத்துரைத்தார்.

எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தொடர்ந்து தேசிய முன்னணியில் இணைந்திருப்போம், அரசியல் பயணத்தைத் தொடர்வோம் என அவர் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

மேலும் இஸ்மாயில் சாப்ரி தலைமையிலான நடப்பு அரசாங்கம் தேசியக் கூட்டணி அரசாங்கமா இல்லையா என்ற விவாதமும் தேவையில்லை – மாறாக இது பிரதமர் முன்மொழிந்திருக்கும் ஒரே மலேசியக் குடும்பம் சித்தாந்தத்தின் அடிப்படையிலான மலேசிய அரசாங்கம் என்றும் சரவணன் தெரிவித்தார்.