Home நாடு ஜூன் 15: தேசிய பகடிவதை எதிர்ப்பு நாளாக அறிவிக்க நவீனின் தாயார் கோரிக்கை

ஜூன் 15: தேசிய பகடிவதை எதிர்ப்பு நாளாக அறிவிக்க நவீனின் தாயார் கோரிக்கை

538
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பகடிவதை காரணமாக கடந்த 2017-இல் காலமான இளைஞர் நவீனின் தாயார் ஜூன் 15-ஆம் தேதியை தேசிய பகடிவதை எதிர்ப்பு நாளாக அறிவிக்க அரசைக் கேட்டுக்கொண்டார்.

“நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன, ஆனால், வலி இன்னும் தீரவில்லை. நவீனை இழந்த துக்கம் குறையவில்லை,” என்று மலேசியாகினியிடம் அவர் கூறினார்.

நவீனின் கொலை தொடர்பான நீதிமன்ற வழக்கு தொடர்கையில், ஜூன் 15- ஐ நவீன், மற்றும் பகடிவதையால் பாதிக்கப்பட்ட சுல்பர்ஹான் ஒஸ்மான் சுல்கர்னைன் மற்றும் அனைவருக்கும் மரியாதை நிமித்தமாக தேசிய பகடிவதை எதிர்ப்பு தினமாக அறிவிப்பதன் மூலம் அதை எதிர்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

“இந்த நாள் தேவைப்படும் மாற்றங்களின் நிலையான நினைவூட்டலாக இருக்கட்டும். குரல்கள் இப்போது சத்தமாகவும் வலுவாகவும் உள்ளன. எல்லா அன்பும் கண்ணீரும் அர்த்தமற்றதாக இருக்கக்கூடாது. தயவுசெய்து ஜூன் 15 ஐ தேசிய பகடிவதை எதிர்ப்பு தினமாக அறிவிக்கவும். நம்பிக்கையை வளர்ப்பதற்கும், வஞ்சம் மற்றும் பொய்களின் நிழல்களில் மறைக்கத் தேர்ந்தெடுக்கும் கோழைகளுக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை ஏற்படுத்துவதற்கும் இது ஒரு சிறிய படியாகும்,” என்று அவர் கூறினார்.

ஜூன் 9, 2017 இரவு தனது நண்பர் வீட்டிற்கு செல்லும் வழியில் முன்னாள் பள்ளித் தோழர் உட்பட இளைஞர்களால் நவீன் துன்புறுத்தப்பட்டு தாக்கப்பட்டார்.