ஸ்பெயின் நாட்டின் செவில் (Seville) நகரில் இந்த ஆட்டம் நடைபெற்றது.
இரண்டு குழுக்களுமே இறுதி வரை கோல் அடிக்க முடியாமல் ஆட்டத்தை முடித்துக் கொண்டன. இரண்டு குழுக்களுமே 0-0 என சமநிலை கண்டன.
1964, 2008, 2012 ஆண்டுகளில் நடைபெற்ற ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் வெற்றிவாகை சூடிய ஸ்பெயின் நேற்று ஈரோ 2020-இல் முதன் முறையாக பங்கெடுத்தது. இருப்பினும் கோல் எதவும் அடிக்க முடியாமல் தடுமாறியது.
நேற்று திங்கட்கிழமை (ஜூன் 14) நடைபெற்ற ஆட்டங்களின் முடிவுகள்:
செக் குடியரசு 2 – ஸ்காட்லாந்து 0
சுலோவாக்கியா 2 – போலந்து 1
ஸ்பெயின் 0 – சுவீடன் 0
Comments