Home வணிகம்/தொழில் நுட்பம் எச்எஸ்பிசி வங்கி 13 கிளைகளை மூடுகிறது

எச்எஸ்பிசி வங்கி 13 கிளைகளை மூடுகிறது

839
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இந்த ஆண்டு டிசம்பர் 31 முதல் தனது 13 கிளைகளை மூடுவதாக எச்எஸ்பிசி வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி பரிவர்த்தனைகளை அருகிலுள்ள கிளை, ஏடிஎம் வழியாக அல்லது அதன் மின்னியல் வங்கி தளங்களில் தொடர்ந்து நடத்த முடியும் என்று அது கூறியுள்ளது.

“மலேசியாவில் எங்கள் வணிகத்திற்கான தொடர்ச்சியான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம். வங்கியின் எதிர்காலத்தை மாற்றியமைக்க விரும்புகிறோம்.

#TamilSchoolmychoice

“நாங்கள் வளர்ந்து வரும் நிதி மற்றும் வங்கி சேவைகளுக்கு ஏற்ப எங்கள் மின்னியல் வங்கி இருப்பை விரிவுபடுத்துகிறோம், எங்கள் கிளைகளை குறைக்கிறோம்,” என்று எச்எஸ்பிசி ஓர் அறிக்கையில் கூறியது.

2021 மற்றும் 2023- க்கு இடையில் மேம்பட்ட மின்னியல் திறன்கள் மற்றும் புதிய தொழில்நுட்பத்துடன் தனது கிளைகளை சித்தப்படுத்துவதற்கு 160 மில்லியனுக்கும் அதிகமான முதலீட்டை செய்துள்ளதாக அக்குழு தெரிவித்துள்ளது.

“நாட்டில் 130 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களுக்கு நீண்ட வரலாறு உள்ளது. மேலும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவை செய்வதற்கும், முதலீடு செய்வதற்கும் திட்டமிட்டுள்ளோம்,” என்று அது மேலும் கூறியுள்ளது.