Home நாடு துன் அப்துல்லா படாவி நலம்- தவறான செய்திக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

துன் அப்துல்லா படாவி நலம்- தவறான செய்திக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

576
0
SHARE
Ad

கோலாலம்பூர்: துன் அப்துல்லா அகமட் படாவியின் அலுவலகம் முன்னாள் பிரதமர் இறந்துவிட்டதாகக் கூறப்படும் செய்திகளை மறுத்துள்ளது.

அப்துல்லா அலுவலகம், அவரது குடும்பத்தினருடன் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக கூறியுள்ளது. அப்துல்லா இறந்துவிட்டதாகக் கூறி தவறான செய்திகள் பரப்பப்படுவதற்கு எதிராக அலுவலகம் சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் அது தெரிவித்தது.

“குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக எந்தவொரு செய்தியையும் பரப்புவதற்கு முன்னர் பொதுமக்கள் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்று நிர்வாகம் நம்புகிறது,” என்று அப்துல்லா அலுவலகம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

#TamilSchoolmychoice

வியாழக்கிழமை அதிகாலை முதல், 81 வயதான அப்துல்லா காலமானதாக செய்தி வெளியாகி வருகிறது.
பொறுப்பற்ற தரப்பினரால் அப்துல்லாவைப் பற்றிய தவறான அறிக்கைகள் பரப்பப்படுவது இது முதல் முறை அல்ல. முன்னதாக, அப்துல்லாவின் அலுவலகம் இதேபோன்ற மறுப்புகளை பல முறை வெளியிட்டுள்ளது.