கோலாலம்பூர்: மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா நேற்று தெரிவித்த கருத்துக்களைத் தொடர்ந்து அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும்.
இஸ்தானா நெகாரா மூலம் சமர்ப்பிக்கப்பட்ட கருத்துக்களையும் அரசாங்கம் கவனத்தில் எடுத்துள்ளதாக பிரதமர் அலுவலகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“மாமன்னரை சந்தித்தப்போது, பிரதமர் கொவிட் -19 தொற்றுநோய் கையாளவது, அவசர கட்டளைகளை அமல்படுத்துதல், திட்டத்தை செயல்படுத்துதல் குறித்து அறிவுறுத்தியுள்ளார். தேசிய கொவிட்-19 நோய்த்தடுப்பு, பொருளாதார ஊக்கத் தொகைகள் மற்றும் மக்களுக்கு நிதி உதவி, நாடாளுமன்ற அமர்வை செயல்படுத்துதல், தேசிய மீட்புத் திட்டம் மற்றும் பிற தொடர்புடைய விஷயங்களும் இதில் அடங்கும்,” என்று அந்த அறிக்கை மேற்கோளிட்டுள்ளது.
எனவே, மத்திய அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின் அடிப்படையில் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
புதன்கிழமை, அல்-சுல்தான் அப்துல்லா விரைவில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தை தெரிவித்திருந்தார்.