Home நாடு ‘செப்டம்பரில் நாடாளுமன்றம் திறப்பது சரி என நான் கூறவில்லை’

‘செப்டம்பரில் நாடாளுமன்றம் திறப்பது சரி என நான் கூறவில்லை’

1027
0
SHARE
Ad

கோலாலம்பூர்: உத்துசான் மலேசியாவில் வெளியான செய்தியின்படி, நாடாளுமன்றம் எப்போது மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்பது குறித்து தாம் கருத்து தெரிவித்ததை தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக மக்களவைத் தலைவர் அசார் அசிசான் தெரிவித்தார்.

செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டும் பிரதமர் மொகிதின் யாசின் திட்டம் சரியானது என்று தாம் கூறியதாகக் குறிப்பிடுவதை அசார் மறுத்தார்.

“இந்த விஷயத்தைப் பற்றி நான் உண்மையில் என்ன சொன்னேன் என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன். செப்டம்பர் அல்லது அக்டோபர் 2021 இல் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு பிரதமர் ஒரு உறுதிப்பாட்டைச் செய்துள்ளார் என்பதையும், அவர் கூறிய உரையில் அவ்வாறு செய்வதற்கான காரணத்தை அவர் கூறியதையும் நான் வெளிப்படுத்தியிருந்தேன்.

#TamilSchoolmychoice

“மேலே கூறியது போல, பிரதமரின் முடிவு சரியானது, அல்லது அது ஏற்றுக்கொள்ளத்தக்கது மற்றும் மிகவும் தாமதமானது அல்ல என்று நான் ஒருபோதும் உறுதியாகக் கூறவில்லை அல்லது எந்த முடிவையும் எடுக்கவில்லை,” என்று அவர் கூறினார்.