கோலாலம்பூர் : மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணனும், கூட்டரசுப் பிரதேச துணையமைச்சர் எட்மண்ட் சந்தாராவும் இணைந்து நேற்று புதன்கிழமை (ஜூன் 16) செலாயாங் மொத்த சந்தைக்கு வருகை தந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மனித வள அமைச்சின் தான் வழக்கமாக மேற்கொள்ளும் சோதனை நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என இந்த வருகை குறித்து பின்னர் சரவணன் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
செலாயாங் மொத்த சந்தையில் நிறைய அந்நியத் தொழிலாளர்களும் மற்ற உள்ளூர் தொழிலாளர்களும் பணியாற்றுகின்றனர்.
ஜூன் 15-ஆம் தேதி வரை 19,517 தொழிற்சாலைகள், பணியிடங்களையும், 107,620 தொழிலாளர் தங்குமிடங்களையும் மனிதவள அமைச்சு சோதனையிட்டதாகவும் சரவணன் மேலும் தெரிவித்தார்.
அந்த சோதனைகளின் அடிப்படையில் சட்டங்களின் மீறியதற்காக 747 விசாரணை அறிக்கைகள் தொடங்கப்பட்டன.
இவற்றில் 125 விசாரணைகள் வழக்குகளாக தொடுக்கப்பட்டு, நாடளாவிய அமர்வு நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டன.
மேலும் 55 வழக்குகளில் மொத்தம் 361,000 ரிங்கிட் அபராதங்களாக வசூலிக்கப்பட்டன.
305 வழக்குகளில் 3,323,000 ரிங்கிட் கம்பவுண்ட் எனப்படும் அபராதங்களாக வழக்குகள் தொடுக்கப்படாமல் வசூலிக்கப்பட்டன என்றும் சரவணன் பத்திரிகையாளர்களிடம் மேலும் தெரிவித்தார்.
சரவணன், எட்மண்ட் சந்தாரா இருவரும் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் படக் காட்சிகளை இங்கே காணலாம்: