Home உலகம் ஈரோ 2020 : நெதர்லாந்து 2 – ஆஸ்திரியா 0 – நெதர்லாந்தும் 16 குழுக்களில்...

ஈரோ 2020 : நெதர்லாந்து 2 – ஆஸ்திரியா 0 – நெதர்லாந்தும் 16 குழுக்களில் ஒன்றாகத் தேர்வு!

1068
0
SHARE
Ad

கோப்பன்ஹேகன் (டென்மார்க்) : ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 18) அதிகாலை 3.00 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் நெதர்லாந்தும், ஆஸ்திரியாவும் களமிறங்கின.

இதில் நெதர்லாந்து 2-0 கோல் எண்ணிக்கையில் ஆஸ்திரியாவைத் தோற்கடித்தது.

இந்த ஆட்டம் நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்றது.

#TamilSchoolmychoice

“சி” (C) பிரிவுக்கான இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இரண்டு ஆட்டங்களில் வெற்றி – 6 புள்ளிகள் என்ற தகுதியோடு நெதர்லாந்து அடுத்த சுற்றுக்குச் செல்லும் 16 குழுக்களில் ஒன்றாகத் தேர்வாகியுள்ளது.

நேற்று வியாழக்கிழமை (ஜூன் 17) நடைபெற்ற ஆட்டங்களின் முடிவுகள்:

உக்ரேன் 2 – நோர்த் மாசிடோனியா 1

பெல்ஜியம் 2 – டென்மார்க் 1

நெதர்லாந்து 2 – ஆஸ்திரியா 0