Home உலகம் ஈரோ 2020 : பெல்ஜியம் 2 – டென்மார்க் 1 – அடுத்த சுற்றுக்குத் தேர்வாகியது...

ஈரோ 2020 : பெல்ஜியம் 2 – டென்மார்க் 1 – அடுத்த சுற்றுக்குத் தேர்வாகியது பெல்ஜியம்

992
0
SHARE
Ad

கோப்பன்ஹேகன் (டென்மார்க்) : ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் நேற்று வியாழக்கிழமை (ஜூன் 17) நள்ளிரவு 12.00 மணிக்கு நடைபெற்ற பெல்ஜியம்-டென்மார்க் இடையிலான ஆட்டத்தில் பெல்ஜியம் 2-1 கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டம் டென்மார்க் நாட்டின் கோப்பன்ஹேகன் நகரில் நடைபெற்றது. “பி” (B) பிரிவுக்கான இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இரண்டு ஆட்டங்களில் வெற்றி – 6 புள்ளிகள் என்ற தகுதியோடு பெல்ஜியம் அடுத்த சுற்றுக்குச் செல்லும் 16 குழுக்களில் ஒன்றாகத் தேர்வாகியுள்ளது.

நேற்று வியாழக்கிழமை (ஜூன் 17) நடைபெற்ற ஆட்டங்களின் முடிவுகள்:

உக்ரேன் 2 – நோர்த் மாசிடோனியா 1

பெல்ஜியம் 2 – டென்மார்க் 1

நெதர்லாந்து 2 – ஆஸ்திரியா 0