Home உலகம் ஈரோ 2020 : குரோஷியா 3 – ஸ்காட்லாந்து 1 ; குரோஷியா 16 குழுக்களில்...

ஈரோ 2020 : குரோஷியா 3 – ஸ்காட்லாந்து 1 ; குரோஷியா 16 குழுக்களில் ஒன்றாகத் தேர்வு

1461
0
SHARE
Ad

இலண்டன் : ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் இன்று புதன்கிழமை (ஜூன் 23) அதிகாலை 3.00 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் குரூப் “டி” பிரிவில் குரோஷியாவும் ஸ்காட்லாந்தும் களமிறங்கின.

ஸ்காட்லாந்திலுள்ள கிளாஸ்கோ நகரில் இந்த ஆட்டம் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் குரோஷியா 3-1 என்ற கோல் எண்ணிக்கையில் ஸ்காட்லாந்தைத் தோற்கடித்தது.

#TamilSchoolmychoice

இதன் மூலம் 4 புள்ளிகளுடன் “டி” பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்து குரோஷியா அடுத்த சுற்றுக்குச் செல்லும் 16 குழுக்களில் ஒன்றாகத் தேர்வாகியுள்ளது.

இதே பிரிவில் இன்று அதிகாலை நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் செக் குடியரசை 1-0 கோல் எண்ணிக்கையில் தோற்கடித்ததன் மூலம் இங்கிலாந்து 7 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்குச் செல்லும் 16 குழுக்களில் ஒன்றாகத் தேர்வாகியிருக்கிறது.

“டி” பிரிவில் இடம் பெற்றிருக்கும் ஸ்காட்லாந்து ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் இருந்து வெளியேறுகிறது.

புதன்கிழமை (ஜூன் 23) அதிகாலை 3.00 மணிக்கு நடைபெற்ற மற்ற ஆட்டத்தின் முடிவு:

இங்கிலாந்து 1 – செக் குடியரசு 0