Home உலகம் ஈரோ 2020 : இங்கிலாந்து 1 – செக் குடியரசு; 16 குழுக்களில் ஒன்றாக இங்கிலாந்து...

ஈரோ 2020 : இங்கிலாந்து 1 – செக் குடியரசு; 16 குழுக்களில் ஒன்றாக இங்கிலாந்து தேர்வு!

1617
0
SHARE
Ad

இலண்டன் : ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் இன்று புதன்கிழமை (ஜூன் 23) அதிகாலை 3.00 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் குரூப் “டி” பிரிவில் இங்கிலாந்தும், செக் குடியரசும் மோதின.

இலண்டனின் வெம்ப்ளி அரங்கில் இந்த ஆட்டம் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் செக் குடியரசைத் தோற்கடித்தது. இங்கிலாந்தின் ஒரே கோலை ஸ்டெர்லிங் அடித்தார்.

#TamilSchoolmychoice

செக் குடியரசைத் தோற்கடித்ததன் மூலம் 7 புள்ளிகளுடன் “டி” பிரிவில் முதலிடத்தைப் பிடித்து இங்கிலாந்து அடுத்த சுற்றுக்குச் செல்லும் 16 குழுக்களில் ஒன்றாகத் தேர்வாகியுள்ளது.

இங்கிலாந்துடனான ஆட்டத்தில் தோல்வியடைந்தாலும் செக் குடியரசு 4 புள்ளகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்குச் செல்லும் 16 குழுக்களில் ஒன்றாகத் தேர்வாகியிருக்கிறது.

“டி” பிரிவில் இடம் பெற்றிருக்கும் மற்ற இரண்டு குழுக்களில் குரோஷியாவும் அடுத்த சுற்றுக்குச் செல்லும் 16 குழுக்களில் ஒன்றாகத் தேர்வாகியுள்ளது.

ஸ்காட்லாந்து ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் இருந்து வெளியேறுகிறது.

புதன்கிழமை (ஜூன் 23) அதிகாலை 3.00 மணிக்கு நடைபெற்ற மற்ற ஆட்டத்தின் முடிவு:

குரோஷியா 3 – ஸ்காட்லாந்து 1