புதுடில்லி, ஏப்ரல் 20- தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனாரின் மறைவிற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது தாராள குணம் மற்றும் கல்வி சேவை உள்ளிட்ட சமூகத்தில் அவரின் பங்களிப்பு என்றும் அனைவரின் மனதிலும் நிலைத்து இருக்கும் என பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். ஆதித்தனார், பத்திரிக்கையாளர், கல்வியாளர், தொழிலதிபராக இருந்தும் அடிமட்ட மக்கள் வரை சாதாரணமாக பழகும் எளிமையானவராக இருந்தார் எனவும் பிரணாப் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
