Home கலை உலகம் புனே சர்ச்சில் ஆர்யா- நயன்தாராவுக்கு திருமணம் நடந்தது!

புனே சர்ச்சில் ஆர்யா- நயன்தாராவுக்கு திருமணம் நடந்தது!

470
0
SHARE
Ad

nayanthara-and-aryaசென்னை, ஏப்ரல் 20- பிரபுதேவாவை விட்டு பிரிந்த நயன்தாராவை ஆர்யாவுடன் இணைத்து தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு புனேயில் உள்ள ஒரு சர்ச்சில் அவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றதாம். இதனால் மீடியாக்களில் வெளிவந்த செய்திகள் இன்று உண்மையாகி விட்டது என்று அந்த வட்டார மக்களெல்லாம் ஓடிச்சென்று பார்த்துள்ளனர்.

ஆனால் அங்கு சென்ற பிறகுதான் ஆர்யா-நயன்தாரா இருவரும் திருமணம் செய்து கொண்டது ராஜாராணி படத்துக்காக என்பது தெரிந்திருக்கிறது. அதையடுத்து இந்த செய்தியை கூடியிருந்த மக்கள் நிஜம் என நினைத்து விடக்கூடாது என்பதற்காக, இது படத்துக்காக எடுக்கப்பட்ட காட்சி என்று மைக்கில் பட டைரக்டரான அட்லிகுமார் கூறி, குழம்பிய ரசிகப் பெருங்குடி மக்களை தெளிவுபடுத்தி அனுப்பியிருக்கிறார்.

ஆனால் இந்த காட்சியை தொடர்ந்து மூன்று நாட்களாக அதே சர்ச்சில் படமாக்கினார்களாம். அதுவும் படப்பிடிப்பு போலவே தெரியாத அளவுக்கு அமைக்கப்பட்ட செட்டில் ஆர்யா-நயன்தாரா இருவரும் நிஜ மணமக்களே தோற்று போகும் அளவுக்கு மிக யதார்த்தமாக நடித்தார்களாம். அதிலும் நயன்தாராவுடன் மணக்கோலத்தில் தான் நடித்த காட்சிகளை ஒரு ஆல்பமாகவே வாங்கி விட்டாராம் ஆர்யா.