Home கலை உலகம் ஜூலை முதல் ஆஸ்ட்ரோவில் மேலும் அதிகமான பன்னாட்டுத் தமிழ் தொடர்கள்

ஜூலை முதல் ஆஸ்ட்ரோவில் மேலும் அதிகமான பன்னாட்டுத் தமிழ் தொடர்கள்

733
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இந்த மாதம் ஜூலை தொடங்கி, ஆஸ்ட்ரோவின் அலைவரிசைகளில் மேலும் அதிகமான பன்னாட்டுத் தமிழ் தொடர்கள் ஒளிபரப்பாகவிருக்கின்றன.

தொலைக்காட்சி அலைவரிசைகள், ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் திரில்லர் எனப்படும் வகையிலான பரபரப்பு விறுவிறுப்பு தொடர்கள், பக்தி, திகில், அனிமேஷன் தொடர்களை வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம்.

ஜூன் 30 – ஜூலை 1 முதல் ஆஸ்ட்ரோவில் முதல் ஒளிபரப்புக் காணும் மேலும் அதிகமான மற்றும் பல வகையான பன்னாட்டுத் தமிழ் தொடர்களை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வாயிலாகக் கண்டுக் களிக்கலாம்.

“அவதாரம்” – தொடர்

#TamilSchoolmychoice

த. சூரியவேலன் இயக்கிய ‘அவதாரம்’ எனும் சுவாரசியமான சஸ்பென்ஸ் த்ரில்லர் தொடரை வாடிக்கையாளர்கள் கண்டு இரசிக்கலாம். 26 அத்தியாயங்களைக் கொண்ட இத்தொடரில் கர்ணன் ஜி. கிராக், சுபாஷினி அசோகன், மதியழகன், புரவலன் நாராயணசாமி, உதய சௌந்தரி, அலாவுததீன் அலி, திவ்யா ரவீன், ரூபினி அன்பழகன், ஸ்டீபன் செஜாரியா மற்றும் ஹரன் பி.ஜே ஆகிய உள்ளூர் மற்றும் பன்னாட்டுக் கலைஞர்கள் நடித்துச் சிறப்பித்துள்ளனர்.

ஒரு விருது வென்ற நடிகரின் மர்மமான மரணத்திற்குப் பிறகு தொடர்ச்சியானக் கொலைகள் ஒரு நகரத்தில் நிகழவே, படுத்தப் படுக்கையாய் இருக்கும் ஒரு நபரைக் காவல்துறையினர் சந்தேகப்படுகின்றனர்.

‘அவதாரம்’, ஜூலை 1 முதல் இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் (அலைவரிசை 202) முதல் ஒளிபரப்புக் காணுகிறது.

இரசிகர்கள் கீழ்க்காணும் பக்தித் தொடர்களையும் எதிர்ப்பார்க்கலாம்:

“மகமாயி” தொடர்

  • டி.எஸ்.நாகபரனா இயக்கிய ‘மகமாயி’ தொடர், தேவியை நம்பாத சுந்தரியைப் பற்றியக் கதை. சுந்தரி தேவியின் மீது கொண்ட அவநம்பிக்கை, தேவியின் தீவிரப் பக்தராக இருந்த இளவரசி இராஜேஸ்வரி எனும் சுந்தரியின் முன்னாள் பிறவியைத் தொடர்புப்படுத்துகிறது. ‘மகமாயி’, ஜூலை  5  முதல் இரவு 7.30 மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில் எச்டியில் (அலைவரிசை 201) முதல் ஒளிபரப்புக் காணுகிறது.

‘ஸ்ரீ விஷ்ணு தசாவதாரம்’- பக்தித் தொடர்

பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் மறுசீரமைப்பிற்குப் பிரசித்திப் பெற்ற விஷ்ணு தெய்வம், அதிர்ஷ்டம், செல்வம், செழிப்பு மற்றும் அழகுக்குப் பிரசித்திப் பெற்ற லட்சுமி தேவியின் மீது காதல் வயப்படும் நிகழ்வுகளைத் தீரஜ் குமார் இயக்கிய ‘ஸ்ரீ விஷ்ணு தசாவதாரம்’ சித்தரிக்கின்றது.

இத்தொடர், ஜூலை 15 முதல் இரவு 7 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் (அலைவரிசை 202) முதல் ஒளிபரப்புக் காணுகிறது. மேலும், புதிய அத்தியாயங்கள் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகும்.

“நம்பினால் நம்புங்கள்” திகில் தொடர்

கொடூரமான அமானுஷ்ய நிகழ்வுகளையும், கிராமப் புறங்களில் நிகழும் விசித்திரமானச் சடங்குகளையும் முன்வைக்கும் தொகுப்பாளர் நிழல்கள் ரவி இடம் பெறும் ‘நம்பினால் நம்புங்கள்’ எனும் திகில் தொடரையும் வாடிக்கையாளர்கள் கண்டு இரசிக்கலாம்.

இத்தொடர் ஜூலை 3 முதல் இரவு 7.30 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் (அலைவரிசை 202) முதல் ஒளிபரப்புக் காணுகிறது. மேலும், புதிய அத்தியாயங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகும்.

இளம் வயது இரசிகர்கள் அனிமேஷன் தொடர்களையும் எதிர்பார்க்கலாம்:

‘அட்சூ’ – தும்மினால் விலங்காக மாறும் சிறுவன்

தியோ எனும் ஒன்பது வயது புத்திசாலிச் சிறுவன் தும்மும்போது ஒரு விலங்காக மாறும் சுவாரசியமானக் கதையை ‘அட்சூ’ சித்தரிக்கின்றது. ‘அட்சூ’, ஜூலை 1  முதல் மாலை 5 மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில் எச்டியில் (அலைவரிசை 201) முதல் ஒளிபரப்புக் காணுகிறது.

‘வீர்: தி ரோபோ போய் சீசன் 1’ – பெருங்களிப்புத் தொடர்

சுஹஸ் கடவ் இயக்கிய ‘வீர்: தி ரோபோ போய் சீசன் 1’ எனும் பெருங்களிப்புத் தொடர், வீர் என்ற ரோபோவைச் சித்தரிக்கின்றது. மனிதனைப் போன்ற உணர்ச்சிகள், குணங்கள் மற்றும் சிறந்த திறன்களைக் கொண்ட ரோபோ தனது நண்பர்களானச் சுல்பூல் எனும் செல்லக் கழுதை, இம்லி எனும் எட்டு வயதுக் குழந்தை மற்றும் கிந்து எனும் மந்திர ஜின் ஆகியோரின் உதவியுடன் நாளைக் காப்பாற்ற முயற்சிக்கின்றது. ‘வீர்: தி ரோபோ போய் சீசன் 1’, ஜூலை 1  முதல் மாலை 5.30 மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில் எச்டியில் (அலைவரிசை 201) முதல் ஒளிபரப்புக் காணுகிறது.

மேல் விவபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.