Home நாடு அஸ்மின் அலியின் துருக்கி வருகை சர்ச்சையானது

அஸ்மின் அலியின் துருக்கி வருகை சர்ச்சையானது

884
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அனைத்துலக வாணிப தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தொடர்ந்து இணையவாசிகளின் கண்டனங்களுக்கு உள்ளாகி வருகிறார்.

தற்போது ஐரோப்பா சென்றிருக்கும் அவர் ஆஸ்திரியாவுக்கு சென்று அங்குள்ள முதலீட்டாளர்கள் மலேசியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர் எனக் கூறியிருந்தார். அதற்காக, பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நேரத்தில் வெளிநாட்டுப் பயணம் தேவையா? அரசாங்கப் பணம் இதுபோன்ற பயணங்களுக்கு விரயமாகலாமா? என்பது போன்ற கேள்விகள் இணையத் தளங்களில் எழுப்பப்பட்டன.

#TamilSchoolmychoice

அதைத் தொடர்ந்து துருக்கி சென்ற அஸ்மின் அலியோடு அவரின் குடும்பமும் சென்றதா என்ற சர்ச்சை எழுந்தது.

காரணம், அஸ்மினை துருக்கியின் வரலாற்றுபூர்வ இடமான ஹாகியா சோப்பியா என்ற பகுதிக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்தபோது, சுற்றுலா வழிகாட்டி ஒருவர் அஸ்மினை குடும்பத்தோடு அழைத்துச் சென்றதாகப் பதிவிட்டார்.

“நாங்கள் மலேசியாவில்தான் இருக்கிறோம்” – அஸ்மின் அலி குடும்பத்தினர்

மலேசிய இணைய வாசிகள் அஸ்மின் அலியை குடும்பத்தோடு அழைத்துச் சென்றதற்காக வறுத்தெடுத்து விட்டனர்.

ஆனால் உடனடியாக நாங்கள் மலேசியாவில்தான் இருக்கிறோம் என அவரின் குடும்பத்தினர் அறிக்கை விட்டனர்.

அதைத் தொடர்ந்து துருக்கி சுற்றுலா வழிகாட்டியும் அமைச்சின் அதிகாரிகளை குடும்பத்தினர் என தவறாக நினைத்து விட்டேன், அதற்காக மன்னிப்பு கோருகிறேன் என தனது இன்ஸ்டாகிராம் பதிவில் திருத்தம் செய்தார். தற்போது அந்தப் பதிவே அகற்றப்பட்டு விட்டதாக அறியப்படுகிறது.

அண்மையக் காலத்தில் அஸ்மின் அலியின் ஒவ்வொரு நகர்வும் மலேசியர்களால் கடுமையான கண்டனங்களுக்கு உள்ளாகி வருகின்றன.