Home No FB செல்லியல் பார்வை காணொலி : மொகிதின் யாசின், அஸ்மின் அலியை ஓரங்கட்டுகிறாரா?

செல்லியல் பார்வை காணொலி : மொகிதின் யாசின், அஸ்மின் அலியை ஓரங்கட்டுகிறாரா?

832
0
SHARE
Ad

செல்லியல் பார்வை காணொலி | மொகிதின் யாசின், அஸ்மின் அலியை ஓரங்கட்டுகிறாரா? | 14 ஜூலை 2021
Selliyal Paarvai Video | Muhyiddin Yassin marginalising Azmin Ali? | 14 July 2021

அண்மைய சில வாரங்களாக அனைத்துலக வாணிப தொழில்துறை அமைச்சரான அஸ்மின் அலிக்கு எதிராக இணையவாசிகளின் கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன.

மொகிதின் யாசின் அரசாங்கத்திலும் அஸ்மின் அலியின் செல்வாக்கு சரிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது. அதிகாரபூர்வமற்ற துணைப் பிரதமர் என்று பார்க்கப்பட்ட அஸ்மின் அலிக்குப் பதிலாக இப்போது அம்னோவின் இஸ்மாயில் சாப்ரி உண்மையிலேயே துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

கொவிட் தேசிய மீட்சித் திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு அமைச்சராக நிதியமைச்சர் தெங்கு சாப்ருல் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில் மொகிதின் யாசின், அஸ்மின் அலியை அரசாங்கப் பணிகளில் இருந்து ஓரங்கட்டப் பார்க்கிறாரா என்பது குறித்து மேற்கண்ட காணொலியில் விவரிக்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்.