Home இந்தியா நரேந்திர மோடியை மீண்டும் சந்திக்கும் ஸ்டாலின்!

நரேந்திர மோடியை மீண்டும் சந்திக்கும் ஸ்டாலின்!

492
0
SHARE
Ad
ஸ்டாலின் – நரேந்திர மோடி – சந்திப்பு கோப்புப் படம்

சென்னை : நடந்து முடிந்த தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவுடன் கடுமையான மோதல்களைக் கொண்டிருந்தார் மு.க.ஸ்டாலின். பாஜகவுக்கு எதிராகத் தீவிரப் பிரச்சாரங்களையும் ஸ்டாலின் முன்னெடுத்தார்.

இப்போது முதலமைச்சராக நரேந்திர மோடியுடன் தமிழ்நாடு விவகாரங்களைக் கையாள வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஸ்டாலின் அண்மையில் புதுடெல்லி சென்று மோடியைச் சந்தித்தார்.

தற்போது மேகதாது அணை விவகாரம் தமிழ்நாட்டிலும் கர்நாடக மாநிலத்திலும் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் பிரதமர் மோடியைச் சந்திக்க எதிர்வரும் ஜூலை 18-ஆம் தேதி மீண்டும் புதுடில்லி செல்கிறார் ஸ்டாலின்.

#TamilSchoolmychoice

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை புதிய அணை கட்ட முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை.

கர்நாடக அரசு திட்டமிட்டுள்ள இந்த மேகதாது அணை திட்டத்திற்கு தமிழ்நாடு அரசும் தமிழக கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தமிழ்நாட்டின் அனைத்துக்கட்சி தலைவர்கள் அடங்கிய குழு நேற்று வியாழக்கிழமை (ஜூலை 15) புதுடெல்லி புறப்பட்டு சென்றது.

நீர்சக்தித் துறை மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து அந்த குழு தமிழ்நாடு சார்பான முறையீடுகளைச் சமர்ப்பித்துள்ளது.

மேகதாது விஷயத்தில் இரு மாநிலங்களும் தங்களின் முடிவில் பிடிவாதமாக இருக்கின்றன. கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா இன்று  புதுடில்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அதைத் தொடர்ந்து ஸ்டாலினும் ஜூலை 18-ஆம் தேதி புதுடெல்லி செல்கிறார். அங்கு  பிரதமரை நேரில் சந்திப்பார் என்றும் அவரின் சந்திப்பின்போது மேகதாது திட்டம் முக்கிய இடம் வகிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் திங்கட்கிழமை (ஜூலை 19ம் தேதி) நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கவிருக்கிறது.